Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/02/2019

இன்றைய நாள் எப்படி 10/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 27ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 4ம் தேதி, 10.2.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 11:21 வரை; அதன் பின் சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம் மாலை 4:58 வரை; அதன்பின் அசுவினி நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00 – 1:30 மணி
* குளிகை : மதியம் 3:00 – 4:30 மணி
* சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
* பொது : முகூர்த்தநாள், வசந்த பஞ்சமி, சூரியன் வழிபாடு.

மேஷம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெற அடிப்படையில் சில மாற்றம் செய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் பின்பற்ற வேண்டும்..

ரிஷபம் : அனுகூல சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். ஏழ்மையானவர்களுக்கு உதவுவீர்கள். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மிதுனம் : சமூக சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். நண்பர், உறவினர் பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். தாராள பணவரவில் குடும்பத் தேவை பூர்த்தியாகும். உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

கடகம் : உறவினர்களின் வழிகாட்டுதல் நம்பிக்கை தரும். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருட்களை வாங்க வேண்டாம். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

சிம்மம் : மனதில் பதற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. செலவுக்கு கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

கன்னி : மனதில் இருந்த குழப்பம் தீரும். செயல்களில் அளப்பரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். பணவரவில் லாப விகிதம் அதிகரிக்கும். முக்கியமான வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

துலாம் : அன்புக்குரியவர் நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம் : சிலர் பொறாமை எண்ணத்துடன் பேசுவர். விலகுவதால் மன அமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். குடும்பத்தில் ஒற்றுமை சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு : நற்செயலை சிலர் கேலி, கிண்டல் செய்வர். பணியில் தகுந்த அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு உடல்நலம் காக்க உதவும்.

மகரம் : இனிய நிகழ்வுகளை எண்ணி மகிழ்வீர்கள். புதியவர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க சிறப்பாக பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம் : முக்கியமான செயலை அடுத்தவரிடம் தர வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். செலவுகளில் திட்டமிடுவது நல்லது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

மீனம் : தனித் திறமையினால் அளப்பரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திருப்தி கரமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி, 16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: