Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 10/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 14ம் தேதி,
10.1.20 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி நள்ளிரவு 1:49 வரை,
அதன் பின் பிரதமை திதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 3:31 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: காலை 10:30-12:00 மணி
எமகண்டம்: பகல் 3:00-4:30 மணி
குளிகை: காலை 7:31-9:00 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
பொது ஆருத்ரா தரிசனம், நடராஜர் வழிபாடு, பவுர்ணமி கிரிவலம் மலைக்கோவில் வழிபாடு.

 

மேஷம்: தாயின் ஆசி பலமாக கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சிரமம் குறையும். சீரான பணவரவு கிடைக்கும். மிதமான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

மிதுனம்: சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தனித்திறமை சிறப்பு பெறும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்: தன்மான குணத்துக்கு சோதனை வரலாம். மனஅமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்விர்கள். அளவான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

சிம்மம்: தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி: சந்தோஷ எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் வளரும். தாராள பணவரவு கிடைக்கும். கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

துலாம்: சிலர் உங்களை கருவியாக பயன்படுத்த எண்ணுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அடைய புதியமுயற்சி வேண்டும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

விருச்சிகம்: எதார்த்தமாக பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க வேண்டும். முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

தனுசு: நண்பரின் வாழ்த்து கிடைக்கும். செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம் : கடந்த நாட்களில் இருந்த சிரமம் விலகும். செயல்களில் உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

கும்பம் : சிலர் உங்களிடம் உதவியை நாடுவர். உதவி புரிந்து நற்பெயரை காத்திடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மீனம் : நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவு குறையலாம். ஒவ்வாத உணவினை உண்ண வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 08/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி, 8.7.2020 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி ...

%d bloggers like this: