Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/01/2019

இன்றைய நாள் எப்படி 10/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 3ம் தேதி,
10.1.19 வியாழக்கிழமை வளர்பிறை, சதுர்த்தி திதி மதியம் 3:39 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:14 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள். மனதில் இருந்த தயக்கம் விலகும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

ரிஷபம் : மனதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தாமதம் ஏற்படுத்திய பணிகளில் சில நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான பணவரவு கிடைக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர்.

மிதுனம் : சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். பெருந்தன்மையுடன் நடந்து சுயகவுரவம் பாதுகாத்திடுவீர்கள். தொழிலில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

கடகம் : நண்பரில் ஒருவர் மாறுபட்ட குணத்துடன் பேசுவார். பொறுமை காப்பதால் மட்டுமே நட்பினை பாதுகாக்கலாம். தொழிலில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். முக்கிய பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படும். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு துணை நிற்கும்.

சிம்மம் : உறவினர்களின் உதவி ஊக்கம் தரும். முக்கிய பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கன்னி : சவால்களை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். பலரும் வியந்து பார்க்கின்ற நன்னிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். கூடுதல் பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

துலாம் : பொது இடங்களில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பணவரவை விட குடும்பச்செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கைத் தரும்.

விருச்சிகம் : சிலரது தேவையற்ற விமர்சனம் மனவருத்தம் தரலாம். வாழ்வில் லட்சியங்களை உணர்ந்து பணிபுரிவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் மூலதனம் தேவைப்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது.

தனுசு : மனதில் உற்சாகம் பிறக்கும். திட்டமிட்ட பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மகரம் : அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அக்கறையுடன் பணிபுரிவது அவசியம். குடும்பச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் : செயல்களில் நல்ல மாற்றம் பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் ஏற்படுகிற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும்படி அதிக செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...