Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/11/2019

இன்றைய நாள் எப்படி 09/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 23ம் தேதி, ரபியுல் அவ்வல் 11ம் தேதி,
9.11.19 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி பகல் 3:40 வரை;
அதன்பின் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 4:32 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
பொது : சனி மகாபிரதோஷம் நந்தீஸ்வரர், சிவன் வழிபாடு.

 

மேஷம்: சிலர் உங்களிடம் எதிர்மறையாக பேசுகிற சூழ்நிலை இருக்கும். பெருந்தன்மையுடன் விலகுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இயங்கும். பண செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.
ரிஷபம்: கடின உழைப்பினால் உங்களின் லட்சியத்தினை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் மனப்பூர்வமாக வாழ்த்துவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.
மிதுனம் : மனதில் நம்பிக்கை வளரும். நற்குணம் உள்ளவர்களின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
கடகம்: உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். நண்பரின் ஆலோசனை நல் வழி நடத்தும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணவரவில் இருந்த தாமதம் விலகும். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.
சிம்மம் : நண்பர்களுடன் அதிருப்தி எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை தாமதமின்றி சரி செய்வது நல்லது. முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவீர்கள். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
கன்னி : உங்கள் செயல்களில் பிறர் நலன் குறித்த அக்கறை அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படும். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.
துலாம்: திகைப்பு தந்த பணியை எளிதில் நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் ஓரளவு வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை பெருகும். குடும்ப தேவைக்கு அதிக பணம் செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.
விருச்சிகம்: நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை தகுந்த செயலால் சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உணவு பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.
தனுசு: செயல்கள் நிறைவேற தாமதமாகலாம். மனதில் நம்பிக்கை அவசியம். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரம் குறிப்பிட்ட இலக்கை அடையும். பண வரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். கவன குறைவால் சிறு பொருள் தவற நேரிடலாம்.
மகரம் : உங்கள் செயலில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் இனிய அணுகுமுறையால் வியத்தகு வளர்ச்சி பெறும். பண வரவில் கூடுதல் லாபம் கிடைக்கும். உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை உண்டு.
கும்பம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து அவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் சீர் பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். பண வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும்.
மீனம் : உங்கள் பேச்சில் புத்திசாலி தனமும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வளர அனுகூல காரணி பலம் பெறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். இயன்ற அளவில் அற பணி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 02/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 16ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 2.12.19 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி ...

%d bloggers like this: