Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி,
9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 7:26 வரை;
அதன்பின் துவாதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 1:47 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு

 

மேஷம் : இறையருள் உங்களை நல்வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி இனிதே நிறைவேறும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : கூடுதல் பணி சுமை ஏற்படலாம். வீணாக பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராகும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

மிதுனம் : நிர்ப்பந்த சூழ்நிலை ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம். மாணவர்கள் புதியவர்களிடம் நிதானித்து பழகவும்.

கடகம்: எதிர்ப்பு விலகி வாழ்வில் முன்னேற்ற பாதை உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அபிவிருத்தியாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும்.

சிம்மம் : உங்கள் செயல்களில் புதிய பரிமளிப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணிபுரிவீர்கள். லாப விகிதம் கூடுதலாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவி புரிவீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி வந்து சேரும்.

கன்னி : அவசர பணி மனதிற்கு கஷ்டத்தை தரும். நண்பரின் உதவியால் நிலைமையை சரி செய்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல கூடாது.

துலாம் : தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சாதக சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

விருச்சிகம்: உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரம சூழ்நிலை சரியாகும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படலாம். பணியாளர் பணியிட சூழல் உணர்ந்து செயல்படவும்.

தனுசு: பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்த்திடுங்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். பண செலவில் சிக்கனம் வேண்டும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : வாழ்வில் பல நலமும் பெற நல்வாய்ப்பு கனிந்து வரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும்.

கும்பம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடத்தை உருவாக்கும். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். அரசியல்வாதிகள் சமரச பேச்சுக்களில் நிதானம் பின்பற்ற வேண்டும்.

மீனம் : இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 19/02/2020

இன்று! விகாரி வருடம், மாசி மாதம் 7ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 24ம் தேதி, 19.2.2020 புதன்கிழமை, தேய்பிறை, ஏகாதசி ...

%d bloggers like this: