Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/09/2019

இன்றைய நாள் எப்படி 09/09/2019

மேஷம் : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். அளவான பணவரவு கிடைக்கும். புத்திரரின் செயலை மேம்படுத்த ஆலோசனை சொல்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

ரிஷபம் : சிலரது பேச்சு சங்கடப்படுத்தலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் உற்பத்தி , விற்பனை அளவுடன் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை பயன் தரும்.

மிதுனம் : முக்கியப்பணி நிறைவேற அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : மனதில் உற்சாகமும், கலையுணர்வும் அதிகரிக்கும். எவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : மாறுபட்ட சூழ்நிலை ஏற்படலாம். பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கன்னி : உங்கள் பேச்சை சிலர் தவறாக புரிந்து கொள்வர். எவரிடமும் நிதானித்து பழகவும். தொழில், வியாபாரத்தில் சில குறுக்கீடு வந்து சரியாகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : குடும்ப உறுப்பினர் அதிக பாசம் கொள்வர். நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்திகர சன்மானம் பெறுவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வதில் தாமதம் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கலாம். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.

தனுசு : அக்கறையுடன் பணிபுரிவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரம் சிறந்து பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். முக்கியஸ்தர் ஒருவரின் பாராட்டு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

மகரம் : விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை சிக்கன பணச்செலவில் நிறைவேற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : பொறுமையுடன் செயல்படுவீர்கள். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் : மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நற்செயல் அத்தனையும் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார தொடர்பு புதிய அறிமுகங்களை பெற்றுத் தரும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: