Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/08/2019

இன்றைய நாள் எப்படி 09/08/2019

மேஷம் : நிகழ்வுகளை பார்த்து அதிருப்தி கொள்வீர்கள். நிலுவைப்பணி துரிதகதியில் செயல்பட வைக்கும். தொழில், வியாபாரத்தில் நடைமுறை சீராக தேவையான பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் இலகுவாகும்.

ரிஷபம் : உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலம்பெறும்.கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு வரும். அரசியல்வாதிகளுக்கு அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம் : உங்கள் அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும்.விலகியஉறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

கடகம் : உங்களின் எதார்த்த பேச்சு, சிலர் மனதை பாதிக்கலாம். எதிர்வரும் பணிகளுக்கு, முன்னேற்பாடு செய்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும்.

சிம்மம் : பணிகள் நிறைவேற தாமதமாகலாம்.அனுபவசாலியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம்.

கன்னி : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.தொழில், வியாபார வளர்ச்சி சிறப்பாக முன்னேற்றம் பெறும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

துலாம் : சுற்றுப்புற சூழ்நிலையின் தாக்கம் தொந்தரவு தரலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.புதிய முயற்சி இஷ்டதெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

தனுசு : நிகழ்வுகள் மாறுபட்டதாக இருக்கும். உங்களிடம் பழகுகிற நல்லவரையும் தவறாக கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். சத்தான உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.

மகரம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல்அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் வெகுநாள் கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்.

கும்பம் : மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும்.பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.

மீனம் : தொடர்பில்லாத பணி குறுக்கிட்டு சிரமம் தரலாம்.செயல்களில் முன்யோசனை அவசியம்.தொழில், வியாபாரம் செழிக்க, நண்பர் உதவுவர்.கூடுதல் பணச்செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: