Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 09/08/2018

இன்றைய நாள் எப்படி 09/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி,
9.8.18 வியாழக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 9:13 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:54 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:28 வரை, மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : மாதசிவராத்திரி, பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்களால் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.

ரிஷபம்: மற்றவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.தொழிலில் இலக்கை அடைய அதிக நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம்.

மிதுனம்: பேச்சு, செயல்களில் புத்துணர்வு வெளிப்படும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி வந்து சேரும். பெண்கள் உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வர். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

கடகம்: நல்லவர்களின் ஆலோசனையை பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரம சூழ்நிலை சரியாகும். புதிய இனங்களில் திடீர் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

சிம்மம்: திட்டமிட்ட செயலில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

கன்னி: வளர்ச்சிக்கான நல்வாய்ப்பு கனிந்து வரும்.தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.மாணவர் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

துலாம்: பொது விஷயங்களில் கருத்து சொல்வதை தவிர்த்திடுங்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச்செலவில் சிக்கனம் வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: குடும்பத்தினரின் ஆதரவால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக ருக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

தனுசு: உறவினர்களிடம் பாசத்துடன் பழகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி இனிதே நிறைவேறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்துடன் விரும்பிய உணவு வகை உண்டு மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

மகரம்: முன்னர் செய்த நற்செயலுக்கான பலன் தேடி வரும். தொழிலில் உற்பத்தி விற்பனை வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தினரின் தேவையை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கும்பம்: அவசரப்பணியால் சிரமத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் முயற்சியும் உழைப்பும் உதவும். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வது கூடாது.

மீனம்: மற்றவரின் அறிவுரையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் பதவி பெறும் முயற்சியில் ஈடுபடுவர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ஷாபான் 9ம் தேதி, 15.4.19, திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: