Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/05/2019

இன்றைய நாள் எப்படி 09/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 2ம் தேதி,
9.5.19 வியாழக்கிழமை வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 1:28 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 4:31 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
பொது : சதுர்த்தி விரதம். விநாயகர், அம்பிகை வழிபாடு, முகூர்த்த நாள்.

 

மேஷம் : உங்கள் வாழ்வில் பெற்ற வசதியை பெரிதென எண்ணுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். தாய்வழி உறவினரால் நன்மை ஏற்படும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

மிதுனம் : குடும்ப உறுப்பினர் அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரம் செழிக்க தகுந்த உபாயங்களை பின்பற்றுவீர்கள். உபரி பண வருமானம் உண்டு. பணியாளர்களுக்கு திருப்திகர சன்மானம் கிடைக்கும்.

கடகம் : பழகுபவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பேச வேண்டாம். தொழில், வியாபார அபிவிருத்தி செய்வதில் தாமதம் இருக்கும். புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். சீரான ஓய்வு பின்பற்றுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

சிம்மம்: மனதில் உற்சாகமும், கலையுணர்வும் அதிகரிக்கும். எல்லாரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

கன்னி: நண்பர் உங்களை புகழ்ந்து பேசுவர். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், தாராள பணவரவும் கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுவர்.

துலாம்: உங்களின் சிரம சூழ்நிலை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் சீர் பெற அதிகம் பணிபுரிவது அவசியம். பணச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. விலை மதிப்புள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

விருச்சிகம்: செயல்களில் சிறுஅளவிலான குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்; எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு: வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமான அளவில் இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மகரம் : தவறாக விமர்சித்த ஒருவர் உங்களிடம் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சிபெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பணப்பரிவர்த்தனை நல்ல முன்னேற்றம் பெறும். பிள்ளைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்: சிலர் உங்கள் பேச்சை தவறாக புரிந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் சில குறுக்கீடு வந்து சரியாகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : அடுத்தவர் மீதான நம்பிக்கையில் மாற்றுச் சிந்தனை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். அளவான பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயலை மேம்படுத்த உதவுவீர்கள். தெய்வ வழிபாடு மனதில் நிம்மதி தரும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: