Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/04/2019

இன்றைய நாள் எப்படி 09/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 26ம் தேதி, ஷாபான் 3ம் தேதி,
9.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி மதியம் 3:18 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 9:36 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம்
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர், துர்கை வழிபாடு.

 

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: மனதில் தெய்வ நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் தேவையான மூலதனத்துடன் அபிவிருத்தி பணியைச் செய்வீர்கள். உறவினருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

மிதுனம்: உறவினரால் தொந்தரவுக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பிறரது பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

கடகம்: திட்டமிட்ட பணி சிறப்பாக நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

சிம்மம்: சமயோசிதமாக செயல்பட்டு வளர்ச்சியடைவீர்கள். தொழில், உற்பத்தி, விற்பனையால் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் நிம்மதி காண்பீர்கள்.

துலாம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறைகளை உடனடியாக சரி செய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்தத பணக்கடன் கிடைக்கும். புத்திரரின் நற்செயல் பெற்றோர்க்கு பெருமை தேடித் தரும்.

விருச்சிகம்: உற்சாக மனநிலையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும்.உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள்.

தனுசு: வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு உருவாகும். நம்பிக்கையுடன் வளர்ச்சி நோக்கில் திட்டமிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.உபரி வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தேவை தாராள அளவில் நிறைவேறும்.’

மகரம்: எவருக்கும் தகுதிக்கு மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. பணவரவு சீராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படலாம்.

கும்பம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அரிகரிக்கும். உபரி பணவரவை முதலீடாக மாற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: