Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/03/2019

இன்றைய நாள் எப்படி 09/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 25ம் தேதி, ரஜப் 1ம் தேதி,
9.3.19 சனிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 2:03 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 12:27 வரை;
அதன் பின் அசுவினி நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம் : நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பால் பணவரவு சீராகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தாயின் ஆறுதல் மனதில் நம்பிக்கையை தரும்.

ரிஷபம் : சவால்களை ஏற்று செயல்பட எண்ணம் வளரும். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறுகளை சரி செய்வீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். சுபசெய்தி வந்து சேரும். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித் தரும்.

 

மிதுனம் : அனுபவ அறிவு பரிமளிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய தொடர்பு கிடைக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்க அனுகூலம் உண்டு.

கடகம் : குடும்ப சூழ்நிலையை பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் மந்தகதியில் இயங்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனநடை நல்லது. தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

சிம்மம் : இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும். முக்கியத் தேவைகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி : செயலில் நேர்மைத் திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

துலாம் : மனம் செயலில் புத்துணர்வு ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் : புதிய பணிகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்து கொள்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

தனுசு : சிலர் பொறாமையுடன் பேசுவர். தொழில் வியாபாரம் செழிக்க இதமான அணுகுமுறை உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். இஷ்டதெய்வ வழிபாடு மனதில் நிம்மதியைத் தரும்.

மகரம் : மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

கும்பம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்ப ஒற்றுமை மிகவும் தேவையாகும்.

மீனம் : அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: