Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/02/2019

இன்றைய நாள் எப்படி 09/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 26ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 3ம் தேதி,
9.2.19 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 10:23 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 3:34 வரை;
அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம் : இடையூறு செய்பவரை உணர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும்.

ரிஷபம் : பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். அபரிமிதமான அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் : செயல்களில் சீர்திருத்தம் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உருவாகும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

கடகம் : மனதில் குழப்பம் உருவாகலாம். நண்பரிடம் நிதானித்து பேசுவது நல்லது. தொழிலில் பணிச்சுமையை குறைக்கும் அளவில் பணிபுரிய வேண்டும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம் : சொந்த நலனில் அக்கறை வளரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம்.

கன்னி : வெகுநாள் முயற்சி இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி முன்னேற்றம் தரும். சராசரியைவிட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். நண்பரால் உதவி உண்டு.

துலாம் : முக்கியஸ்தர் ஒருவரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் : செயல்திறன் கண்டு சிலர் பொறாமைப்படுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு வரலாம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். மனதை இலகுவாக வைத்துக் கொள்வது நல்லது.

தனுசு : போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். நட்பின் பெருமையை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

மகரம் : உறவினர்களின் உதவி கிடைக்கும். உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரம் வியப்பூட்டும் அளவில் வளர்ச்சி பெறும். கடன் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம் : செயல் தாமதம் ஆவதால் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் ஆலோசனை தொழில் வியாபாரம் செழிக்க பயன்படும். மிதமான அளவில் பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மீனம் : பழகுபவர்களிடம் மதித்து அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவர்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/08/2019

மேஷம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். செயல்களில் சாமர்த்தியமாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானத்தில் ...

%d bloggers like this: