Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 09/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 13ம் தேதி,
9.1.20 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 2:47 வரை,
அதன் பின் பவுர்ணமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் பகல் 3:42 வரை,
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரணயோகம்

நல்ல நேரம்: காலை 10:30-12:00 மணி
ராகு காலம்: பகல் 1:30-3:00 மணி
எமகண்டம்: காலை 6:00-7:30 மணி
குளிகை: காலை 9:00-10:30 மணி
சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
பொது தட்சிணாமூர்த்தி வழிபாடு

 

மேஷம்: அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து புதிய நிலை உருவாகும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

ரிஷபம்: சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம்: தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் பலம்பெறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு வரும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்: நிகழ்வுகள் மாறுபட்டதாக இருக்கும். நல்லவரையும் தவறாக கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். சத்தான உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.

சிம்மம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில்,வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

கன்னி : பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில்,வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

துலாம்: தொடர்பில்லாத பணி சிரமம் தரலாம். செயல்களில் முன்யோசனை அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க, நண்பர் உதவுவர். கூடுதல் செலவு ஏற்படலாம். பெண்கள் நகையை இரவலாக கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.

விருச்சிகம்: பணிகள் நிறைவேற தாமதமாகலாம். அனுபவசாலியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் காத்திடுவீர்கள். அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் அறிந்து விருந்தில் பங்கேற்கலாம்.

தனுசு: மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் சேமிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.

மகரம் : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை வாங்கித்தருவீர்கள்.

கும்பம்: எதார்த்த பேச்சு, சிலர் மனதை பாதிக்கலாம். எதிர்வரும் பணிகளுக்கு, முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: நிகழ்வுகளால் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவைப்பணி துரிதமாக செயல்பட வைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராகும். செலவு அதிகரிக்கும். ஓய்வு நேரத்தில் இசையை கேட்பதால் மனம் இலகுவாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 08/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி, 8.7.2020 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி ...

%d bloggers like this: