Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 09/01/2019

இன்றைய நாள் எப்படி 09/01/2019

இன்று!
விளம்பி வருடம் மார்கழி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி,
9.1.19 புதன்கிழமை வளர்பிறை, திரிதியை திதி மதியம் 1:35 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 1:50 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : சிவன் வழிபாடு.

மேஷம் : வெகுநாள் தாமதமான செயலில் நன்மை பெறுகிற புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : செயல்களின் நல்ல மாற்றம் பின்பற்றுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். மன உறுதியுடன் பணிபுரிவதால் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பிறர் பார்வையில் தெரியும்படி அதிக செலவு செய்ய வேண்டாம். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

கடகம் : கூடுதலாக உருவாகிற பணிகள் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாக்க சிலரது உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்பச்செலவு அதிகரிக்கும்.

சிம்மம் : மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

கன்னி : மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவர்களும் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும்.

துலாம் : முக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்கக்கூடாது. எவரிடமும் நிதானித்து பேசுவதால் நற்பெயரை பாதுகாக்கலாம். தொழில் வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

விருச்சிகம் : எந்த செயலிலும் நிதானம் பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரிசெய்வது அவசியம். வீண் ஆடம்பரச்செலவு தவிர்க்கவும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

தனுசு : அவமதித்தவர் தன்குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மகரம் : சுயலாபத்திற்காக சிலர் புகழ்ந்து பேசுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

கும்பம் : இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் வாழ்வில் முக்கிய நன்மை பெற துணை நின்று உதவும். சிறு செயலையும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மனநிறைவைத் தரும். நிலுவைப் பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.

மீனம் : மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமம் தரலாம். நண்பரின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில் இலக்கு தாமதமாகப் பூர்த்தியாகும். குடும்பச்செலவு அதிகரிக்கும்.

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: