Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/12/2019

இன்றைய நாள் எப்படி 08/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 22ம் தேதி, ரபியுல் ஆகிர் 10ம் தேதி,
8.12.19 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி காலை 8:36 வரை,
அதன் பின் துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:07 வரை,
அதன் பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள், சூரியன் வழிபாடு

 

மேஷம் : அனுகூல பலன் தேடி வரும். நற்குணம் உள்ளவரின் நட்பு கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு வளர்ச்சி பெறும். தாராளமாக பணம் செலவு செய்வீர்கள். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.
ரிஷபம் : திட்டமிட்ட பணிகளில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். சேமிப்பு பணம் குடும்ப செலவுக்கு பயன்படும். வெளியூர் பயண திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.
மிதுனம் : ஆன்மிக நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து புதிய சாதனை உருவாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம் : புதியவர்களின் அன்பை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.

சிம்மம் : உங்கள் மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். புதிய இனங்களில் பண செலவு அதிகரிக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.
கன்னி : உங்களின் கவன குறைவால் சிரமம் ஏற்படலாம். நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். அளவான பண வரவு கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல கூடாது.
துலாம் : உற்சாக மனதுடன் பணி புரிவீர்கள். உங்களின் செயல் திறனை நண்பர் பாராட்டுவார். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்டு பணிபுரிவீர்கள். எதிர்பார்ப்பு சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உபரி பண வரவு கிடைக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள்.

தனுசு : மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் இதமான அணுகுமுறை நன்மை தரும். பண செலவில் சிக்கனம் பின்பற்றவும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.

மகரம் : செயல் நிறைவேற அதிக முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம். தாயின் ஆறுதல் நம்பிக்கையை தரும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர்.

கும்பம் : செயல்களில் எளிமையை பின்பற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.
மீனம் : பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். கடின உழைப்பால் தொழிலில் சீரான வளர்ச்சி உருவாகும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாக்கவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...