Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 08/12/2018

இன்றைய நாள் எப்படி 08/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 22ம் தேதி, ரபியுல் அவ்வல் 29ம் தேதி,
8.12.18 சனிக்கிழமை, வளர்பிறை பிரதமை திதி மதியம் 2:23 வரை;
அதன்பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 6:57 மணி வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம்; சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : சந்திர தரிசனம், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம் : நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத அழகு சாதனைப் பொருள் பயன்படுத்த வேண்டாம்.

ரிஷபம் : எவரிடமும் சொந்த பெருமை பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மிகவும் தேவையாகும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும்.

மிதுனம் : பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித்தரும்.

கடகம் : நேர்த்தியுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவால் பொன் பொருள் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள். சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

சிம்மம் : செயல்களில் சீர்திருத்தம் தேவைப்படும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

கன்னி : மனதில் சஞ்சலம் ஏற்படலாம். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். தரம் குறைந்த உணவுப் பொருள் கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். தாயின் அன்பு ஆசி நம்பிக்கைத் தரும்.

துலாம் : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை சீராகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

விருச்சிகம் : பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் சாந்தகுணம் வளரும்.

தனுசு : உறவினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

மகரம் : நண்பரை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.

கும்பம் : பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டம் உருவாக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் சில மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.

மீனம் : அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: