Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 08/08/2018

இன்றைய நாள் எப்படி 08/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 23ம் தேதி, துல்ஹாதா 25ம் தேதி,
8.8.18 புதன்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 11:38 வரை;
அதன் பின் திரயோதசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8:24 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை
பொது : பெருமாள் வழிபாடு.

மேஷம்: புதியவர்களிடம் நிதானித்து பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க புதிய உபாயம் பின்பற்றுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: நண்பரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம். வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதித்து நடக்கவும். பெண்களுக்கு பொறுமை அவசியம்.

மிதுனம்: சிறிய செயலையும் மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி நிலை உருவாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். சுற்றுலா செல்ல பயணத்திட்டம் உருவாகும்.

கடகம்: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்: நல்ல செயலுக்கு உரிய பலன் தேடி வரும். அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

கன்னி: மற்றவர் மதிக்கும் விதத்தில் செயல்படுவீர்கள்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டம் உருவாக்குவீர்கள்.உற்பத்தி விற்பனை அதிகரித்து கூடுதல் ஆதாயம் கிடைக்கும். வீடு வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள்.

துலாம்: மனதில் சஞ்சலம் உருவாகி மறையும். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். பணவரவு சுமாராக கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோரின் அன்பும் ஆசியும் மனதிற்கு நம்பிக்கை தரும்.

விருச்சிகம்: குடும்பத்தினரிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் செலுத்தவும்.

துலாம்: மனதில் சஞ்சலம் உருவாகி மறையும். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். பணவரவு சுமாராக கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோரின் அன்பும் ஆசியும் மனதிற்கு நம்பிக்கை தரும்.

தனுசு: உறவினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை புதிய உத்தியில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மகரம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை பெறுவீர்கள். திட்டமிட்ட உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்: கடந்த கால நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். லாபம் கூடும். திடீர் செலவால் கடன் வாங்க நேரிடலாம். ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரி செய்வது நல்லது. பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது சிரமத்தை குறைக்கும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், தை மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி, 17.1.20 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி ...

%d bloggers like this: