Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/07/2019

இன்றைய நாள் எப்படி 08/07/2019

மேஷம்: லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்களால் வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: உங்களின் பேச்சில் விரக்தியின் தன்மை வெளிப்படலாம். பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகரிக்கும். பெண்களுக்க வீட்டுச் செலவில் சிக்கனம் வேண்டும். அரசு வகையில் நன்மை உண்டு.

மிதுனம்: சிலர் உங்களிடம் கருத்துவேறுபாடு கொள்வர். தொழில் வியாபார நடைமுறையில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

கடகம்: பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். உற்பத்தி விற்பனை அதிகரித்து கூடுதல் லாபம் அடைவீர்கள். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு வரும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

சிம்மம்: பொதுநல நோக்குடன் பிறருக்கு உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கலாம். வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

கன்னி: உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர் அரசு வகையில் அனுகூலம் உண்டு.

துலாம்: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி சீராக நிறைவேறும். பணவரவு திருப்தியளிக்கும். பிள்ளைகள் வழியில் திடீர் செலவு ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

விருச்சிகம்: மனதில் தன்னம்பிக்கை பிரகாசிக்கும். தொழில் வியாபாரம் செழித்து புதிய சாதனை படைப்பீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

தனுசு: குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீர்கள். உறவினரால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்டகரமாக சுபசெய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

மகரம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம்: குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சீர் பெற கூடுதல் நேரம் பணிபுரிவது அவசியம். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

மீனம்: நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். சேமிக்க வாய்ப்புண்டு. பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: