Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/06/2019

இன்றைய நாள் எப்படி 08/06/2019

மேஷம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். புதிய வழிகளில் பணச்செலவு ஏற்படும். பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

ரிஷபம்: இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியைக் கண்டு வியப்படைவீர்கள்; உபரி பணவருமானம் வந்து சேரும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பாசத்துடன் நடந்து கொள்வர்.

மிதுனம்: உங்கள் இரக்க குணத்தினால் சிரமம் வரலாம்; கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம்: மனதில் ஆன்மிக நம்பிக்கை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றமான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம்: மனதில் குழப்பம் ஏற்படலாம்; போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தருகிற உணவை உண்ண வேண்டாம்.

கன்னி: எதிர்கால வளமான வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனை ஊக்கம் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு பெறுவர்.

துலாம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதற்கேற்ப அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்: முக்கிய பணி ஒன்றை மறக்கலாம்; குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

தனுசு : அவசரப்பணி ஏற்படலாம்; சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற கூடுதல் உழைப்பு பயன்தரும். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: இடையூறு செய்தவர் இடம் மாறிப்போவர். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். .தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில சுபநிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ்பெறுவீPர்கள். பணவரவு அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.

மீனம்: எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும். சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்கவும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: