Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/03/2019

இன்றைய நாள் எப்படி 08/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 24ம்; தேதி, ஜமாதுல் ஆகிர் 30ம் தேதி,
8.3.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 1:09 வரை;
அதன்பின் திரிதியை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10:55 வரை;
அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
பொது : முகூர்த்த நாள், சந்திர தரிசனம், மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரிசெய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ரிஷபம் : இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகை மகிழ்ச்சி வளரும்.

மிதுனம் : முக்கியமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூல காரணி பலம் பெறும். பணவரவு திருப்திகரமாகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு பதவி உயர்வு சலுகை கிடைக்கும்.

கடகம் : தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் மந்தகதியில் இயங்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். சத்தான உணவு உடல்நலத்தை சீராக்கும்.

சிம்மம் : சிலர் வீண்பேச்சு பேசுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும்.சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி : நண்பரின் ஆலோசனை புதிய வழிகாட்டுதல் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூல காரணி பலம் பெறும். பணவரவு திருப்திகரமாகும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

துலாம் : பேச்சு செயலில் உறுதி நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பில் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம் : எவருடனும் பேசுவதில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரம் சீராக இருக்க கூடுதல் உழைப்பு உதவும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். இயந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும்.

தனுசு : ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும். பணவரவு அளவுடன் இருக்கும். .அறிமுகம் இல்லாதவர் தருகிற உணவு உண்ண வேண்டாம்.

மகரம் : மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடையும். ஆதாய பணவரவில் சேமிப்பு கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம் : உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். தொழில், வியாபாரம் சீர்பெற கூடுதல் முயற்சி உதவும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

மீனம் : அடுத்தவர் வியக்கும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய நன்மை உருவாகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: