Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/02/2019

இன்றைய நாள் எப்படி 08/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 25ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 2ம் தேதி,
8.2.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, திரிதியை திதி காலை 8:57 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:44 வரை;
அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
* பொது : சதுர்த்தி விரதம், விநாயகர், மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : பழகுபவர்களிடம் சூழ்நிலை உணர்ந்து பேச வேண்டும். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படலாம். அதிக பயன்தராத பொருட்கள் வாங்க வேண்டாம்.

ரிஷபம் : குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி மகிழ்வீர்கள்.

மிதுனம் : இளமைக்கால இனிய நினைவுகளில் மகிழ்வீர்கள். மனதில் உறுதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரசப்பேச்சில் தீர்வு கிடைக்கும்.

கடகம் : சிலரது பேச்சு, செயலால் சிரமம் வரலாம். குடும்ப பெருமையை பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்ற வேண்டும். முக்கிய செலவுக்கான பணம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம் : அறிமுகமில்லாதவரிடம் சுயபெருமை வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிவதால் இலக்கு நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தெய்வ வழிபாடு மனதில் புதிய நம்பிக்கையை தரும்.

கன்னி : உறவினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

துலாம் : இதமான அணுகுமுறையை மற்றவர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

விருச்சிகம் : மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். அளவான பணவரவு பெறுவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இயந்திரப்பிரிவு பணியாளர் பாதுகாப்பில் கவனம் கொள்ளவும்.

தனுசு : உடல் நலம் பேணுவதால் பணிகளில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். பணவரவை அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். மாமன், மைத்துனர் ஆதரவாக நடந்து கொள்வர். பொருட்கள் இரவல் கொடுக்க வேண்டாம்.

மகரம் : நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை உற்சாகத்துடன் நிறைவேற்றுவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம் : மாறுபட்ட சூழல் ஏற்படலாம். அவப்பெயர் வராதபடி செயல்படவும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்புப் பணம் செலவுக்கு பயன்படும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராகும்.

மீனம் : சுற்றத்தார் அன்பு பாராட்டுவர். புதியவர்களின் ஆதரவில் தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

யாழ் காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து ...

%d bloggers like this: