Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 08/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 23ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 12ம் தேதி,
8.1.20 புதன்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி நள்ளிரவு 3:13 வரை,
அதன் பின் சதுர்த்தசி திதி, ரோகிணி நட்சத்திரம் பகல் 3:23 வரை,
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: பகல் 12:00-1:30 மணி
எமகண்டம்: காலை 7:30-9:00 மணி
குளிகை: காலை 10:30-12:00 மணி
சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
பொது பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: இரக்க குணத்தினால் சிரமம் வரலாம். கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும்.

ரிஷபம்: இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியால் வியப்படைவீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் மீது பாசம் கொள்வர்.

மிதுனம்: முக்கிய பணியை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கடகம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பர்த்த நற்செய்தி வந்து சேரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம் : குடும்பத்தில் சுபநிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரம் செழிக்கும். சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் தொல்லை குறையும்.

கன்னி: மனதில் குழப்பம் ஏற்படலாம். பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தருகிற உணவினை உண்ண வேண்டாம்.

துலாம்: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழிலில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

தனுசு: இடையூறு செய்தவர் இடம் மாறிப்போவர். மனதில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : சிலரது பேச்சு சங்கடப்படுத்தலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.

கும்பம் : எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும். சொத்து ஆவணத்தை கவனமுடன் பாதுகாக்கவும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும்.

மீனம் : வாழ்வில் வளம்பெற புதிய திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனை ஊக்கம் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 14/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி, 14.1.20 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி ...

%d bloggers like this: