Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/01/2019

இன்றைய நாள் எப்படி 08/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 1ம் தேதி,
8.1.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, துவிதியை திதி காலை 11:28 வரை;
அதன்பின் திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 11:14 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
பொது : திருவோண விரதம், பெருமாள், துர்க்கை வழிபாடு.

மேஷம் : திறமையை வளர்த்து கொள்வீர்கள். கடினம் என ஒதுக்கி வைத்த பணியை புதிய முயற்சியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார அபிவிருத்தியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதமாகலாம். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

மிதுனம் : பகைமை குணம் உள்ளவர் அவமதித்து பேசுவர். பெருந்தன்மை குணத்துடன் அவர்களிடம் இருந்து விலகுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவில் சிக்கனம் நல்லது.

கடகம் : சிந்தனை செயலில் புதிய மாற்றம் பின்பற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாகும். சேமிக்கும் அளவில் பணவரவு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

சிம்மம் : நற்குணம் உள்ளவர்களின் கூடுதல் அன்பு ஆசி கிடைக்கும். மனதில் உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு வெகுமதி வந்து சேரும்.

கன்னி : அவசரப்பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். குடும்பச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

துலாம் : சிலரது குளறுபடியான ஆலோசனை மனதில் சங்கடம் உருவாக்கும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள்.

விருச்சிகம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். இளமைக்கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு : குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழிலில் உள்ள அனுகூலம் பாதுகாக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். பிறர்க்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய வாய்ப்பு வரும். ஆர்வமுடன் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட உற்பத்தி விற்பனை இலக்கு பூர்த்தியாகும். லாப விகிதம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கும்பம் : சிலரின் விமர்சனத்தால் வருத்தம் அடைவீர்கள். லட்சியங்களை உணர்ந்து செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.

மீனம் : எதிர்கால நலனில் அக்கறை வளரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: