Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 07/12/2018

இன்றைய நாள் எப்படி 07/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் அவ்வல் 28ம் தேதி,
7.12.18 வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி மதியம் 1:28 வரை;
அதன்பின் வளர்பிறை பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : புதிய அனுபவ பாடம் கற்றுக் கொள்வீர்கள். செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர்.

ரிஷபம் : செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். முக்கிய செலவுக்கு கடன் பெறுவீர்கள். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

மிதுனம் : பேச்சில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். பிரச்னைகளில் சுமூக தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். உபரி வருமானம் கிடைக்கும். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம் : நல்லவர் செயலையும் தவறாக கருதும் சூழல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு உதவும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

சிம்மம் : உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். சிறுஅளவில் கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் அறிவுப்பூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி : வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் கூடுதல் நன்மை பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம் : சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. முக்கியமான பணி நிறைவேற அவகாசம் தேவைப்படும். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம் : எதிர்கால நலனில் வளரும். நண்பரின் ஆலோசனை பயன் தரும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். அதிக பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : நற்செயல்களை சிலர் விமர்சனம் செய்வர். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் வளம் பலவும் பெறுவீர்கள். உபரி பணவரவில் குடும்பத்தின் அத்தியாவசிய தேவை நிறைவேறும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள்.

கும்பம் : நேர்மை மற்றும் சத்திய குணம் பின்பற்றுவீர்கள். சோதனைகளை தாண்டி உரிய நன்மை வந்து தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

மீனம் : சொந்த பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில் வியாபாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/12/2018

இன்று! விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 12.12.18, புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி ...

%d bloggers like this: