Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/09/2019

இன்றைய நாள் எப்படி 07/09/2019

மேஷம் : தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். முக்கியப் பணிகளில் கவனம் அவசியம். தொழில், வியாபாரத்தில் ஆரவாரம் தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : உங்களின் செயல் திறனை பார்த்து சிலர் பொறாமையுடன் பேசுவர். சொந்தப் பணியில் கவனம் கொள்ளவும். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் உதவும். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும்.

மிதுனம் : அதிக உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கிய பணிகள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம் : பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். புதிய பணிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படுத்துவீர்கள். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும்.

கன்னி : இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தரக்கூடாது. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும்.

துலாம் : தியாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை இஷ்ட தெய்வ அருளால் அதிகரிக்கும். குடும்பத்தின் முக்கிய தேவை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணச்செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்தம் தரும்.

தனுசு : உங்கள் நலம் விரும்புபவரை சந்திப்பீர்கள். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.

மகரம் : உங்களை சிலர் ஏளனமாக பேசுவர். பணியை நிறைவேற்றுவதில் கவனம் நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது.

கும்பம் : நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான உதவி கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

மீனம் : சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/09/2019

மேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ...

%d bloggers like this: