Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/06/2019

இன்றைய நாள் எப்படி 07/06/2019

மேஷம்: அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை வேண்டும். சுற்றுச் சூழ்நிலையின் தொந்தரவினால் நித்திரை தாதமதமாகலாம்.

ரிஷபம்: உங்கள் செயலில் மதிநுட்பத்திறன் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.

மிதுனம்: நண்பர் மூலம் மகிழ்ச்சிகரமான தகவல் வரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் மூலதனத்தை பயன்படுத்துவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பீடு ஏற்படம். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

கடகம்: உங்கள் செயல்களில் திறமை பரிமளிக்கும். நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதியவழி உருவாகும். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

கன்னி: குடும்பத்தினரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். பணவரவும், நன்மையும் திருப்திகரமாக கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: நல்லோரின் ஆலோசனை மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி பணிகளை நிதானமுடன் நிறைவேற்றுவீர்கள். உணவில் கட்டுப்பாடு பின்பற்றவும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

விருச்சிகம்: எண்ணிய காரியம் நிறைவேற கால தாமதம் ஆகலாம். தகுந்த திட்டமிடுதல் வெற்றியை கொடுக்கும். .சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு கூடாது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும்.

தனுசு : அவசரப்பணி ஏற்படலாம்; சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற கூடுதல் உழைப்பு பயன்தரும். சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: பேச்சில் சமயோசிதம் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் அதிக அன்;பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். உபரி பணவருமானம் உண்டு. வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்: தொடர்பில்லாத பணி உருவாகி குறுக்கீடு தரும். தொழிலில் கூடுதல் உழைப்பால் மட்டுமே, திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் தகுந்த அக்கறை வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: