Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/05/2019

இன்றைய நாள் எப்படி 07/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 24ம் தேதி, ரம்ஜான், 1ம் தேதி,
7.5.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, திரிதியை திதி இரவு 3:01 வரை;
அதன்பின் சதுர்த்தி திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 5:10 வரை;
அதன்பின், மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : துர்க்கை வழிபாடு, அட்சய திரிதியை, ரம்ஜான் நோன்பு ஆரம்பம்.

 

மேஷம்: சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதலாக பணிபுரிவீர்கள். பணச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பீர்கள். உடல் நல பிரச்னை குறையும்.

ரிஷபம் : உங்கள் செயலில் சமயோசிதம் நிறைந்திருக்கும். முக்கிய பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம் : சிறு அளவிலான தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் ஆரவார நடைமுறை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். நண்பருடன் வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கடகம் : நிலுவைப்பணிகளை நிறைவேற்ற புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

சிம்மம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். .தொழில் உற்பத்தி, வியாபார வளர்ச்சிக்கான பணிகள் எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

கன்னி : செயல்களில் தகுந்த தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை சரி செய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்க உதவும்.

துலாம் : உங்களின் பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். புதிய முயற்சியை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.

விருச்சிகம் : நண்பர் ஒருவர் உங்களிடம் உதவி கேட்டு பெறுவார். தொழிலில், உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள் .அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

தனுசு : அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைத்து மனதில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.

மகரம் : சிலர் உங்களை ஏளனமாக பேசலாம்; பொறுமையுடன் அவற்றை அலட்சியம் செய்யுங்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவுக் கட்டுப்பாடு நல்லது.

கும்பம் : சிலர் உங்களுக்கு உதவாத ஆலோசனை சொல்வர். உங்களின் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் உற்பத்தி விற்பனையை உயர்த்தலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும்.

மீனம் : உங்களின் தனித்திறமை நண்பர்களிடம் வரவேற்பு பெறும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: