Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/04/2019

இன்றைய நாள் எப்படி 07/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 24ம் தேதி, ஷாபான் 1ம் தேதி,
7.4.19, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி மாலை 4:09 வரை;
அதன் பின் திரிதியை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 8:54 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : சூரியன் வழிபாடு.

 

மேஷம்: பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொளவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

ரிஷபம்: எதிர்மறையாக பேசுபவரிடம் இருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். தாயின் ஆறுதல் நம்பிக்கை தரும்.

மிதுனம்: தியாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி செய்வீர்கள். சத்தான உணவால் ஆரோக்கியம் பலம் பெறும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

கடகம்: திட்டமிட்ட செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க புதிய மாற்றம் செய்வீர்கள். கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டு வெகுமதி கிடைக்கும். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

சிம்மம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை உருவாகி தொந்தரவு ஏற்படும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வார்.

கன்னி: தகுதி திறமை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். லாபம் சுமார். பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும். போட்டி பந்தயத்தில் ஈடுபடக் கூடாது. சீரான ஓய்வு ஆரோக்கியம் பெற உதவும்.

துலாம்: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஏற்படும்.பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதில் பூர்த்தியாகும்.நிலுவைப் பணம் வசூலாகும். விலகிச் சென்ற உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

விருச்சிகம்: மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள்.தாமதமான பணிகள் முன்னேற்ற இலக்கை அடையும்.தொழிலில் உற்பத்தி விற்பனை கூடும். பணவரவு திருப்தியளிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் நகை புத்தாடை வாங்குவர்.

தனுசு: முக்கிய பணி அவசரகதியில் நிறைவேறும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். பணவரவு மிதமாக இருக்கும். பணியாளர்கள் மற்ற ஊழியர்களிடம் அதிகம் பேச வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மகரம்: மாறுபட்ட சூழலால் சிலரது அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

கும்பம்: நற்செயலுக்கான நன்மை தேடி வரும். புதியவர்கள் அன்பு பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். லாபம் சேமிக்கும் விதத்தில் இருக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

மீனம்: முக்கியமான பணியை அடுத்தவரிடம் ஒப்படைக்கக் கூடாது.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.புதிய இனங்களில் திடீர் செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/07/2019

மேஷம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். வருமானத்தில் கொஞ்சம் ...

%d bloggers like this: