Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/03/2019

இன்றைய நாள் எப்படி 07/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 23ம்; தேதி, ஜமாதுல் ஆகிர் 29ம் தேதி,
7.3.19 வியாழக்கிழமை வளர்பிறை, பிரதமை திதி இரவு 11:46 வரை;
அதன்பின் துவிதியை திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 8:59 வரை;
அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். பணிகளை இலகுவாக மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணவரவில் லாப விகிதம் கூடும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவீர்கள்.

ரிஷபம் : மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் அபிவிருத்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும்.

மிதுனம் : பிறரது அதிருப்திக்கு உட்படாதபடி நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கடகம் : வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகை பணம் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

சிம்மம் :அக்கம் பக்கத்தவர்களுடன் அன்பு வளரும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலம்பெறும்.

கன்னி : வெகுநாள் திட்டமிட்ட லட்சியம் நிறைவேறும். நண்பர் உறவினர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம் : சில புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது.

விருச்சிகம்: சிலரது செயல் மனதில் வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

தனுசு : உயர்ந்த செயல்களால் புகழ் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள்.

மகரம் : முக்கிய செயலில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். இதமான அணுகுமுறையால் நிலுவைப் பணம் வசூலாகும். சுற்றுப்புற சூழ்நிலையின் தொந்தரவினால் நித்திரை தாமதமாகலாம்.

கும்பம் : பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு பரிசு பெறுவர்.

மீனம் : குறைவாக பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். செலவில் சிக்கனம் அவசியம். தாயின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: