Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/02/2019

இன்றைய நாள் எப்படி 07/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 24ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 1ம் தேதி,
7.2.19 வியாழக்கிழமை வளர்பிறை, துவிதியை திதி காலை 7:10 வரை;
அதன் பின் திரிதியை திதி, சதயம் நட்சத்திரம் காலை 11:31 வரை;
அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : நண்பரின் உதவி எதிர்பாராமல் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் பெற்றோரின் சொல் கேட்டு நடந்து கொள்வர். நித்திரையில் இனிய கனவு வரும்.

ரிஷபம் : செயல்கள் திட்டமிட்டபடி இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த தாமதம் சரியாகும். தாராள பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

மிதுனம் : நிகழ்வுகள் மனதில் சங்கடம் தரலாம். பொது இடங்களில் நிதானித்து பேச வேண்டும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ண வேண்டும்.

கடகம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். பணவரவு வழக்கத்தை விட குறையலாம். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். இஷ்டதெய்வ வழிபாடு சில நன்மையை தரும்.

சிம்மம் : சிறப்பான செயலால் புதியவர் நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி : தொல்லை கொடுத்தவர் இடம் மாறி போவர். புதியவர்களின் ஆதரவில் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவில் அறப்பணி செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

துலாம் : மனதில் குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு கூடும். பணப்பரிவாத்தனை சீராகும். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்வர்.

விருச்சிகம் : கவனக்குறைவால் பணிகளில் சிரமம் வரலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற உதவுவீர்கள். உறவினர் சுபசெய்தி சொல்வார்.

தனுசு : நடை, உடை, பேச்சில் வசீகரம் உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். தாராள பணவரவில் குடும்பத்தின் தேவை பெருமளவில் நிறைவேறும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும்.

மகரம் : பணிகளை தாமதமின்றி நிறைவேற்றவும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். உறவினருடன் கடின வார்த்தை பேச வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு செய்வதால் மனம் அமைதி பெறும்.

கும்பம் : உடன் பிறந்தவர்கள் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி புதிய முயற்சியால் சரியாகும். குடும்பத்தின் செலவுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

மீனம் : குடும்ப உறுப்பினர்களின் மனம் அறிந்து பேச வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்புப் பணம் செலவாகும். வெளியூர் பயணத்தில் தகுந்த பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: