Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 07/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 22ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 11ம் தேதி,
7.1.20 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 3:27 வரை,
அதன் பின் திரயோதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் பகல் 2:38 வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: பகல் 3:00-4:30 மணி
எமகண்டம்: காலை 9:00-10:30 மணி
குளிகை: பகல் 12:00-1:30 மணி
சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: விசாகம்,அனுஷம்
பொது துர்கை வழிபாடு.

 

மேஷம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். உணவில் கட்டுப்பாடு வேண்டும். பொருட்களை இரவலாக கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : அவசரப்பணி ஏற்படலாம். சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற கூடுதல் உழைப்பு தேவை. சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

சிம்மம்: செயல்களில் திறமை கூடும். நண்பர்கள் புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதியவழி உருவாகும். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

கன்னி : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். புத்திரரை இதமாக வழி நடத்தவும். சுற்றுச் சூழலினால் துாக்கம் பாதிக்கும்.

துலாம்: பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரம் சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

விருச்சிகம்: செயலில் மதிநுட்பத்திறன் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். கூடுதல் பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.

தனுசு: செயலில் நேர்த்தியும், திறமையும் மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் உற்சாகம் பெறுவீர்கள். நிலுவை பணம் வசூலாகும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

மகரம் : சொந்த நலனில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி உருவாகலாம். தொழில், வியாபாரம் சீராக அதிக உழைப்பு தேவை. ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும்.

கும்பம்: எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பொருட்களை இரவலாக வாங்க கூடாது. பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மீனம் : குடும்ப உறுப்பினர் அதிக பாசம் கொள்வர். பணியில் தடைகள் அகலும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றமாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 01/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 9ம் தேதி, 1.7.2020 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: