Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/01/2019

இன்றைய நாள் எப்படி 07/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 23ம் தேதி, ரபியுல் ஆகிர் 30ம் தேதி,
7.1.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 9:23 வரை;
அதன்பின் துவிதியை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 8:43 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், மரண–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : சந்திர தரிசனம், பசு வழிபாடு.

மேஷம் : எதிரியினால் உருவாக்கப்பட்ட சிரமம் செயலிழந்து போகும். புதிதாக வருகிற பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : குணம் கெட்ட ஒருவருக்கு உதவி செய்து பின்னர் மனம் வருந்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணிபுரிவது அவசியம். செலவில் சிக்கனம் வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும்.

 

மிதுனம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பணவரவை விட குடும்பச்செலவு அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.
கடகம் : செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தாமதமான பணியை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிநிலை திருப்திகரமாகும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள்.

கன்னி : குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவுவர். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரிசெய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

துலாம் : சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்வர். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

விருச்சிகம் : உறவினர் தந்த உதவிக்கு மறுஉபகாரம் செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள்.

தனுசு : திறமையுடன் செயல்படுவதால் மட்டுமே திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனர் உதவிகரமாக நடந்து கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : எதிர்வரும் பணிகள் சிறப்பாக நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். பணிகளை குறித்தகாலத்தில் முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள்.

கும்பம் : நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது நற்பலன் தரும். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

மீனம் : நண்பரிடம் கலை ரசனையுடன் பேசுவீர்கள். உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: