Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 06/12/2018

இன்றைய நாள் எப்படி 06/12/2018

இன்று!

விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் அவ்வல் 27ம் தேதி,
6.12.18 வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மதியம் 1:02 வரை;
அதன்பின் அமாவாசை திதி, அனுஷம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:30 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பரணி
பொது : அமாவாசை விரதம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : உறவினரின் கூடுதல் பாசம் வியப்பைத் தரலாம். எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

ரிஷபம் : நண்பருக்கு ஆலோசனை சொல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு அருள்பலம் தரும்.

மிதுனம் : நல்ல செயலை நண்பர் பாராட்டுவார். மனதில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கடகம் : எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். சேமிப்புப் பணம் செலவுகளுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

சிம்மம் : மனம் வருந்தும்படி சிலர் பேசுவர். பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரம் தாமதகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி : செயல் திறன் வளரும். மங்கலத்தன்மையுடன் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

துலாம் : சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. முக்கியமான பணி நிறைவேற அவகாசம் தேவைப்படும். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம் : எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. பிள்ளைகள் படிப்பில் முன்னேற உதவுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

தனுசு : நற்செயல்களை சிலர் விமர்சனம் செய்வர். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : எதிரியால் இருந்த தொல்லை குறையும். வெற்றிப் பாதையில் நடைபோடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

கும்பம் : ஆன்மிக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை பெருமளவில் நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மீனம் : திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பு ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 12/12/2018

இன்று! விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 12.12.18, புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி ...

%d bloggers like this: