Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 06/12/2017

இன்றைய நாள் எப்படி 06/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல்அவ்வல் 16ம் தேதி,
6.12.17 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி மதியம் 3:30 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 3:34 வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் :
காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மூலம்.
பொது : விநாயகர் வழிபாடு. சங்கடஹரசதுர்த்தி. சுபமுகூர்த்தநாள்.

மேஷம் : சிலரது செயல் சங்கடம் தரலாம். நண்பர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றங்கள் செய்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும்.

ரிஷபம் : சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க அனுகூலம் உருவாகும். உபரி பணவரவு வரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு

மிதுனம் : சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். இரக்க சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் மாற்று உபாயத்தினால் சரியாகும். குடும்பச் செலவு அதிகரிக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்

கடகம் : சிரமமான சூழ்நிலை விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க கடும் முயற்சி மேற்கொள்வீர்கள். அதிக ஆதாயம் கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வளர்ச்சி ஏற்படும். திடீர் செலவு ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற அதிக பயிற்சி தேவை.

கன்னி : செயல்களில் புத்துணர்வு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமித வளர்ச்சி ஏற்படும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம் : பிறருக்கு உதவுவதில் ஆர்வம் கொள்வீர்கள். சிறிய முயற்சி கூட பெரிய வெற்றி தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

விருச்சிகம் : திட்டமிட்ட செயலை மறக்கும் சூழல் ஏற்படலாம். கவனம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். புதிய வழிகளில் செலவு ஏற்படும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து விலகியிருங்கள்.

தனுசு : சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். பணியில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும். நிலுவை பணம் பெற அதிக முயற்சி வேண்டும். சீரான ஓய்வு ஆரோக்கியம் பாதுகாக்கும்.

மகரம் : மனதில் அன்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு வரும். பணவரவு சீராகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கும்பம் : நீண்டநாள் பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவர். பெண்களுக்கு நகை வாங்க யோகமுண்டு

மீனம் : விரும்பாத நிகழ்வினால் மனவருத்தம் கொள்வீர்கள். அன்றாட பணிகளில் தாமதம் உருவாகும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய உத்தியை பயன்படுத்த வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். சத்தான உணவால் ஆரோக்கியம் கூடும்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: