Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/09/2019

இன்றைய நாள் எப்படி 06/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 20ம் தேதி, மொகரம் 6ம் தேதி,
6.9.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 1:53 வரை
அதன் பின் நவமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 10:30 வரை
அதன் பின் கேட்டை நட்சத்திரம், சித்த- – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 — 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 — 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 — 4:30 மணி
குளிகை : காலை 7:30 — 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : சிலர் உதவாத ஆலோசனை சொல்வர். செயல் குறையை சரிசெய்வதால் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழில் கூடுதல் உழைப்பினால் வளர்ச்சி பெறும். பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

ரிஷபம் : மனதின் உற்சாகத்தினால் சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும். நிலுவைப் பணம் வசூலாகும். விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

மிதுனம் : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். தாமதமான காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன், மைத்துனருக்கு உதவி செய்வீர்கள்.

கடகம் : இன்று சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்

சிம்மம் : உங்கள் செயல்திறன் கண்டு சிலர் பொறாமைப்படுவர். நீங்கள் சாத்வீக மனதுடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் தொழில், வியாபாரம் சீராகும். குடும்ப தேவைகளை சிக்கனமாக நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கன்னி : அவமதித்தவர் தன் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

துலாம் : கடந்த கால இனிய அனுபவங்களை மனதில் நினைத்து செயல்படுவது நல்லது. சக தொழில், வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. அளவான பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

விருச்சிகம் : உண்மை, நேர்மையை மதித்து செயல்படுவீர்கள். சிறிய பணியும் பல மடங்கு நன்மையை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.

தனுசு : சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். நற்பெயரை பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய முயற்சி பலன் தரும். அளவான பணவரவு கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம்.

மகரம் : இனிய நிகழ்வுகள் மனதில் உற்சாகம் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

கும்பம் : சில நன்மை எளிதில் வந்து சேரும். சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : நண்பரிடம் உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணச்செலவு அதிகரிக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...