Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/07/2019

இன்றைய நாள் எப்படி 06/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 21ம் தேதி, துல்ஹாதா 2ம் தேதி,
6.7.19 சனிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தி திதி மாலை 4:54 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் இரவு 2:14 வரை
அதன் பின் பூரம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30-3:00 மணி
குளிகை : காலை 6:00-7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : சதுர்த்தி விரதம், விநாயகர் சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: பின்விளைவு உணர்ந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். அத்தியாவசிய தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

ரிஷபம்: சிலர் உங்களுக்கு பயனற்ற ஆலோசனை வழங்குவர். தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சி தேவை. லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதிக்கவும். பெண்களுக்கு வரவை விட வீட்டுச் செலவு அதிகரிக்கும்.

மிதுனம்: எதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்வது நல்லது. நல்லவர்களின் ஆலோசனையால் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர்.

கடகம்: மாறுபட்ட கருத்து உள்ளவர் உதவ முன்வருவர். தொழில் வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றவும். முக்கியச் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்: சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரி்ன பாராட்டைப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி: உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்க மறுப்பர். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சி பெறும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் அடக்குமுறைக்கு ஆளாவர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

துலாம்: உற்சாகத்தால் முகத்தோற்றம் பொலிவு பெறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும் நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். மாணவ்ரகள் அக்கறையுடன் படித்து முன்னேறுவர்.

விருச்சிகம்: உறவினர் அதிக பாசம் கொள்வர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீ்ரகள். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு: எளிதான பணி கூட சுமை போல தோன்றும். மனதில் கூடுதல் நம்பிக்கை வளர்ப்பது அவசியம். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். பெண்கள் பயனற்ற பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

மகரம்: சொந்த நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சீர்பெற நவீன மாற்றம் செய்வீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம்.

கும்பம்: தாமதமான காரியம் ஒன்று வளர்ச்சி அடையும்.தொழில் வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.

மீனம்: நிகழ்வுகள் மனதில் உற்சாகம் தரும். எந்த செயலையும் மிகுந்த நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்டவளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக அமையும்.விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 21/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 4ம் தேதி, ஸபர் 21ம் தேதி, 21.10.19 திங்கட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி ...

%d bloggers like this: