Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/06/2019

இன்றைய நாள் எப்படி 06/06/2019

மேஷம் : மனதில் உற்சாகம் ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் காணப்படும். ஆதாய பணவரவில் கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் உருவான தொந்தரவு விலகும்.

ரிஷபம் : பணிகளில் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வீடு மற்றும் வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

மிதுனம் : திறமையுடன் செயல்படுவதால் பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். அதற்கேற்ப பணவரவும் உண்டு. .மாமன், மைத்துனர் உதவிகரமாக நடந்து கொள்வர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

கடகம் : சுயகவுரவத்திற்கு குறை வராமல் நடந்து கொள்வது அவசியம். குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவுவர். தொழிலில் உருவாகிற இடையூறை உடனடியாக சரிசெய்வது நல்லது. சுமாரான பணவரவு உண்டு.

சிம்மம் : நண்பரிடம் கலை ரசனையுடன் பேசுவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். உற்பத்தி, விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

கன்னி : வெகுநாள் திட்டமிட்ட காரியம் நிறைவேற நண்பரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

துலாம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வீர்கள்.

விருச்சிகம் : சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்வர்; உங்களுடைய சுயமான முடிவே நற்பலனை தரும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். புதிய வகையில் பணச்செலவு ஏற்படலாம். தியானம் தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

தனுசு :எதிரியின் சதி செயலிழந்து போகும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மகரம்: குணம் கெட்ட ஒருவருக்கு உதவி செய்து பின்னர் மனம் வருத்தம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் பணிபுரிவது அவசியம். பணச்செலவில் சிக்கனம், சிரமம் தவிர்க்க உதவும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

கும்பம் : உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள்.

மீனம் : உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம்; உண்மை, நேர்மையை கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/06/2019

மேஷம்: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் மற்றும் உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க ...

%d bloggers like this: