Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/04/2019

இன்றைய நாள் எப்படி 06/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 23ம் தேதி, ரஜப் 29ம் தேதி,
6.4.19, சனிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மதியம் 3:49 வரை;
அதன் பின் துவிதியை திதி, ரேவதி நட்சத்திரம் காலை 7:44 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : தெலுங்கு புத்தாண்டு, சந்திர தரிசனம், பெருமாள், சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் பெருகும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். புத்திரர் படிப்பில் சிறந்து விளங்குவர். பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும்.

ரிஷபம்: சிலரது ஆலோசனையால் சங்கடம் ஏற்படலாம். கூடுதல் உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். லாபம் சுமார். பெண்களுக்கு செலவில் சிக்கனம் அவசியம். உடல்நலனில் அக்கறை தேவை. பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

மிதுனம்: வழக்கு, விவகாரத்தில் சுமுகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். வருமானம் திருப்தியளிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: எண்ணம், செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு எதிர்பார்த்தபடி அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வகையில் நன்மை உண்டு.

சிம்மம்: நண்பரின் மீதுள்ள நியாயத்தை உணர்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும்.சுய கவுரவத்திற்காக தாராள அளவில் செலவு செய்வீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி: எதிர்மறையாகப் பேசுபவரிடம் விலகுவது நல்லது.தொழிலில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும்.பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும்.ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

துலாம்: குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். தொழில் அபிவிருத்தியால் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு நடந்தேறும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவால் முன்னேறுவர்.

விருச்சிகம்: நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர்.

தனுசு: மாறுபட்ட சூழலால் தொந்தரவுக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான வளர்ச்சி காண்பீர்கள். பணவிஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். சீரான ஒய்வு உடல் நலனைப் பாதுகாக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

மகரம்: நண்பரின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

கும்பம்: உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். லாபம் பெருகும். சேமிக்க வாய்ப்புண்டு. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம்: மனதில் அகந்தை எண்ணம் வராமல் தவிர்க்கவும்.தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். பணவரவு சீராக இருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: