Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/03/2019

இன்றைய நாள் எப்படி 06/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 22ம் தேதி,ஜமாதுல் ஆகிர் 28ம் தேதி,
6.3.19 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 10:05 வரை;
அதன் பின் பிரதமை திதி சதயம் நட்சத்திரம் மாலை 6:42 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : அமாவாசை விரதம், தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு, சிவன் வழிபாடு,
வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 10:32–11:08 மணி.

மேஷம் : நண்பரின் உதவி அனுகூலம் தரும். புத்துணர்வுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் : வாழ்க்கை பயணத்தில் வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

மிதுனம் : சிலர் பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் தேவையான பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கடகம் : நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரம் வளர்ச்சி இலக்கை அடையும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தாயின் அன்பு ஆசி மனதில் நம்பிக்கை தரும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லக் கூடாது.

சிம்மம் : பிறர் நலனிலும் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். பணப் பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி : எதிர்மறையாக இருந்த சூழ்நிலை, அனுகூலம் தருவதாக மாறும். புதியவர்களின் ஆதரவில் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

துலாம் : அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

விருச்சிகம் : நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு நன்மை தரும். உறவினர் வகையில் செலவு கூடும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க கூடாது.

தனுசு : மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வழி பிறக்கும். வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும்.

மகரம் : எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் : மனதில் நிம்மதியும் பெருமிதமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

மீனம் : அடுத்தவர் வாங்கும் பொருளுக்கு பேரம் பேசாதீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் ஈடுபடக்கூடாது.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: