Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/02/2019

இன்றைய நாள் எப்படி 06/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 23ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 30ம் தேதி,
6.2.19 புதன்கிழமை வளர்பிறை, துவிதியை திதி நாள் முழுவதும்,
அவிட்டம் நட்சத்திரம் காலை 9:07 வரை;
அதன் பின் சதயம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : சந்திர தரிசனம், சிவன் வழிபாடு

மேஷம் : செயல்களில் தைரிய குணம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உற்பத்தி விற்பனை செழித்து கூடுதல் பணவரவு கிடைக்கும். விலகிய உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

மிதுனம் : செயல்களில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற மாற்று உபாயம் உதவும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். தியானம் தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் நிம்மதி ஏற்படும்.

கடகம் : எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். சாந்த குணத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருட்கள் இரவல் கொடுக்க வேண்டாம்.

சிம்மம் : அவமதித்தவர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் தரும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.

கன்னி : நண்பரின் கூடுதல் அன்பும், பாராட்டும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

துலாம் : சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பயன்படும். பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். வழக்கில் தீர்வு பெற தாமதமாகலாம்.

விருச்சிகம் : நண்பரின் ஆறுதல் மனதில் நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறை உடனடியாக சரி செய்வீர்கள். சேமிப்புப் பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

தனுசு : சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி எளிதாக நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மகரம் : வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். சத்தான உணவும் சீரான ஓய்வும் உடல் நலம் பாதுகாக்க உதவும்.

கும்பம் : மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். பணிகளில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவி உண்டு.

மீனம் : பிறர் மனம் அறிந்து பேசுவதால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு வேண்டும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ஷாபான் 9ம் தேதி, 15.4.19, திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: