Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 06/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி,
6.1.20 திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 2:51 வரை,
அதன் பின் துவாதசி திதி, பரணி நட்சத்திரம் பகல் 1:21 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த-மரணயோகம்.

நல்ல நேரம்: காலை 6:00-7:30 மணி
ராகு காலம்: காலை 7:30-9:00 மணி
எமகண்டம்: காலை 10:30-12:00 மணி
குளிகை: பகல் 1:30-3:00 மணி
சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: சுவாதி,விசாகம்
பொது வைகுண்ட ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: நண்பர் மகிழ்ச்சிகரமான தகவல் தருவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற, கூடுதல் மூலதனம் செய்விர்கள். சமூகத்தில், நல்ல மதிப்பு வளரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

ரிஷபம்: மனதில் சஞ்சலம் உருவாகலாம். அனுபவத்தால் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற சீர்திருத்தம் தேவை. சிக்கனம் அவசியம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம் : பேச்சில் சாதுார்யம் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும் கூடுதல் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: உறவினரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். மனதில் உற்சாகமும், செயல்களில் சுறுசுறுப்பும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர்.

சிம்மம்: சிலர் கூறும் அறிவுரை சங்கடத்தை உருவாக்கும்.தொழில், வியாபாரத்தில் உள்ள பணி தாமதமாகலாம். வரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். தாயின் அன்பான வார்த்தை நம்பிக்கைத் தரும்.

கன்னி: முக்கிய செயல் நிறைவேற தாமதமாகலாம். தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற உதவும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு பேசக்கூடாது. பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

துலாம்: செயலில் வசீகர மாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பண வருமானம் உண்டு. பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளுக்கு விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

தனுசு: தொடர்பில்லாத பணி குறுக்கீடு தரும். குடும்பத்தினரால் சிரமம் சரியாகும். தொழிலில் கூடுதல் உழைப்பு தேவை. சீரான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

மகரம் : செயல்களில் தாமதம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணிகளை நிதானமுடன் நிறைவேற்றுவீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை.

கும்பம் : உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

மீனம் : வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/07/2020

இன்று!                              ...