Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/01/2019

இன்றைய நாள் எப்படி 06/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 22ம் தேதி, ரபியுல் ஆகிர் 29ம் தேதி,
6.1.19 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி காலை 7:34 வரை;
அதன்பின் வளர்பிறை பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம் மாலை 6:18 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : சூரியன் வழிபாடு.

மேஷம் : உறவினரில் சிலர் எதிர்பார்ப்பு மனதுடன் அணுகுவர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம் : செயலில் தடுமாற்றம் உருவாக்கலாம். எதிர்கால நலன் கருதி நிதானமும் அக்கறையும் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பயணத்தை எளிதாக்கும்.

மிதுனம் : மனதில் பிறருக்கு உதவுகிற சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை நடைமுறையில் இருந்த குளறுபடி சரியாகும். தாராள பணவரவு கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்

கடகம் : வாழ்வில் பெற்ற நன்மைகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

சிம்மம் : திட்டமிட்ட பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கன்னி : மனக்குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். இதனால் சுயகவுரவம் பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது

துலாம் : நற்செயல் கண்டு புதியவர் அன்பு பாராட்டுவர். மனம் செயலில் புத்துணர்வு பிறக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம் : நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கையைத் தரும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க மாற்று உபாயம் பயன்படுத்துவீர்கள். கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

தனுசு : உறவினருக்கு முன்னர் செய்த உதவிக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் திருப்திகரமான நிலை உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. நித்திரையில் இனிய கனவு வரும்.

மகரம் : செயல்களில் நிதானம் வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். செலவில் சிக்கனம் பின்பற்றவும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை எதிர்கால நன்மைக்கு வழி தரும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

 

கும்பம் : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் நற்செயலை மனமுவந்து பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.

மீனம் : பேச்சில் அதிக அன்பும், பண்பும் கலந்திருக்கும். முக்கியஸ்தரின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு பெறுவீர்கள். பெண்கள் பணவசதிக்கேற்ப புத்தாடை நகை வாங்குவர்.

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/03/2020

இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 17ம் தேதி, ஷாபான் 4ம் தேதி, 30.3.2020 திங்கட்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: