Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/10/2019

இன்றைய நாள் எப்படி 05/10/2019

மேஷம் : எதிர் கால நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய திட்டங்கள் உருவாகும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். தாயின் அன்பு, ஆசி மனதில் நம்பிக்கை தரும்.

ரிஷபம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி உருவாகும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். தகுதி மீறிய வாக்குறுதி எவருக்கும் தர வேண்டாம்.

மிதுனம் : இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் முக்கியமான செயல் நிறைவேறும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

கடகம்: குடும்ப உறுப்பினர் ஆதரவாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமான முன்னேற்றம் பெறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம் : உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். இசை பாடலை ரசிப்பதால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.

கன்னி : உங்கள் உடல் நலத்தில் அக்கறை வேண்டும். செயல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீர்பெற நண்பரால் உதவி உண்டு. பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.

விருச்சிகம்: தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். உங்களின் நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வளர்ப்பு பிராணிகளிடம் விலகுவது நல்லது.

தனுசு: விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். பெருந்தன்மையுடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம் : உங்கள் செயல்களில் நிதானம் வேண்டும். சக தொழில், வியாபாரம் சார்ந்தவரிடம் சச்சரவு பேச வேண்டாம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்ண கூடாது. வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

கும்பம் : இளமை கால நண்பரை சந்திப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். பணபரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் : உங்களின் நல்ல கருத்து வரவேற்பு பெறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள். நிலுவை பணம் கிடைக்கும். வாகன பயணம் இனிதாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: