Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/09/2019

இன்றைய நாள் எப்படி 05/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 19ம் தேதி, மொகரம் 5ம் தேதி,
5.9.19 வியாழக்கிழமை வளர்பிறை, சப்தமி திதி இரவு 3:05 வரை
அதன் பின் அஷ்டமி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 10:53 வரை
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 — 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30- – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00- – 7:30 மணி
குளிகை : காலை 9:00 — 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை சொல்வர். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

ரிஷபம் : செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.

மிதுனம் : நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை பற்றிய சிந்தனை குறையும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவை நிறைவேறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சுமாராக இருக்கும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை தாமதமாகலாம்.

சிம்மம் : முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம்.

கன்னி : சாந்தகுணத்துடன் பேசுவீர்கள். செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : உங்கள் குடும்பத்தேவை அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

விருச்சிகம் : உங்களின் பேச்சில் மங்கலம் நிறைந்திருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம் மாறுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். அதிக பணவரவில் சேமிப்பு கூடும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.

தனுசு : சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.

மகரம் : பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : வாழ்வில் இருந்த குறுக்கீடு விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வந்து சேரும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மீனம் : இன்று பரிகாசத்துடன் பேசுபவரிடம் விலகி சுய கவுரவம் பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 31/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி, 31.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...