Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/08/2019

இன்றைய நாள் எப்படி 05/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 20ம் தேதி, துல்ஹஜ் 3ம் தேதி,
5.8.19, திங்கட்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 9:34 வரை
அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 7:15 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
குளிகை : பகல் 1:30–3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
பொது : கருடபஞ்சமி, சிவன், சாஸ்தா, கருடன் வழிபாடு, கரிநாள்.

 

மேஷம் : அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ரிஷபம் : மனதில் குழப்பம் ஏற்படலாம்.அனுபவங்களை எண்ணி செயல்படுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உருவாகும்..செலவுகளை சரி செய்ய, தகுந்த பணவரவு கிடைக்கும்.தாய்வழி உறவினரிடம் கேட்ட உதவி வந்து சேரும்.

மிதுனம் : முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும்.பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு.ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கடகம் : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

சிம்மம் : உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர்.அவர்களிடம் விரக்தி மனப்பாங்குடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் வசூலிப்பதில் இதமான அணுகுமுறை நன்மை தரும்.ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

கன்னி : முக்கியமான செயல்; எளிதாக நிறைவேறும்.தொழில், வளர்ச்சி பெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும்.பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

துலாம் : சிலர் பயனற்ற வகையில் உங்களிடம் பேசுவர்.சொந்தப்பணியில் அக்கறை கொண்டு விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு சரி செய்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : மனதில் புத்துணர்வு ஏற்படும்.குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர்.தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

தனுசு : பெரியவர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும்.பெண்கள் புத்தாடை நகை வாங்க நல்யோகம் உண்டு.

மகரம் : மனதில் சஞ்சலம் உருவாகலாம்.பணி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாக நண்பரின் ஆலோசனை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

கும்பம் : குடும்பத் தேவைகளில் கவனம் கொள்வீர்கள்..தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும்.உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் சலுகை பெறலாம்.

மீனம் : மனதில் உறுதி நிறைந்திருக்கும். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக அளவில் பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...