Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/07/2019

இன்றைய நாள் எப்படி 05/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 20ம் தேதி, துல்ஹாதா 1ம் தேதி,
5.7.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:18 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 3:55 வரை
அதன் பின் மகம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00-4:30 மணி
குளிகை : காலை 7:30-9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம்: சிலர் தவறான ஆலோசனை சொல்லலாம். உங்கள் நேர்மை குணத்திற்கு அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். வழிபாடு மனம் அமைதிக்கு வழிவகுக்கும்.

ரிஷபம்: உங்களின் பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிப் போகும் நன்னிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம் : சிலரது பேச்சால் மனதில் சங்கடம் உருவாகும்.கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம்.தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து உண்ணவும். நண்பரால் உதவி உண்டு.

கடகம்: கலை உணர்வுடன் நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் குறுக்கிட்ட சிரமங்களை பற்றிய சிந்தனை குறையும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிப்பர்.

சிம்மம்: பிடிவாத குணத்தால் சிலரது அதிருப்திக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் பின்பற்றினால் பிரச்னை ஏற்படாது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். அதிக விலையுள்ள பொருட்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி: மனதில் அன்பு எண்ணம் அதிகரிக்கும். உயர்வு, தாழ்வு கருதாமல் அனைவரையும் மதிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: சாந்த குணத்துடன் செயல்படுவீர்கள். செயல்களில் வெற்றி பெற தேவையான அனுகூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில்,வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பால் வருமானம் சீராகும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.

தனுசு : திட்டமிட்ட பணி நிறைவேற தாமதம் ஏற்படலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்.தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் படும்படி அதிக பணம் செலவழிக்க வேண்டாம். தெய்வ வழிபாடு நிம்மதி தரும்.

மகரம் : எதிரி தொல்லை மறையும். தொழில், வியாபார வளர்ச்சியால் கூடுதல் ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். அரசியல்வாதிகள் பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காண்பர். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

கும்பம்: செயல்களில் வெற்றிக்கான கதவு திறக்கும். நண்பர்கள் தேவையான உதவியை வலிய வந்து செய்வர். தொழில், வியாபாரத்தில் பலம் பெற புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். திட்டம் நிறைவேறும் முன் முடிவை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: