Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/06/2019

இன்றைய நாள் எப்படி 05/06/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 1ம் தேதி,
5.6.19 புதன்கிழமை வளர்பிறை, துவிதியை திதி பகல் 1:38 வரை;
அதன் பின் திரிதியை திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 11:41 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00-1:30 மணி
எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
குளிகை : காலை 10:30-12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
பொது : நடராஜர் வழிபாடு.

 

மேஷம்: இதுவரை மனதில் இருந்த குழப்பம் தீரும். அனுபவங்களை எண்ணி அதற்கேற்ப செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் ஏற்படலாம்; அதற்கேற்ப, தாய்வழி உறவினரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

ரிஷபம்: குடும்பத் தேவைகளில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் சலுகை பெறலாம்.

மிதுனம்: உங்கள் மனதில் புத்துணர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

கடகம்: சிலர் உங்களிடம் தேவையற்ற பேச்சுக்களை பேசுவர்; சொந்தப்பணியில் அக்கறை கொண்டு அவர்களிடமிருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறு சரி செய்வீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்: பெரியவர்களின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான மூலதனத்தின் மூலம் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்க நல்யோகம் உண்டு.

கன்னி: முக்கியமான காரியம் எளிதாக நிறைவேறும். தொழில், வளர்ச்சி பெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித்தருவீர்கள்.

துலாம்: உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். அவர்களிடம் விரக்தி மனப்பாங்குடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம் வசூலிப்பதில் இதமான அணுகுமுறை நன்மை தரும். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்: மனதில் சஞ்சலம் உருவாகலாம். பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாக நண்பரின் ஆலோசனை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

தனுசு: மனதில் உறுதி நிறைந்திருக்கும். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக அளவில் பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

மகரம்: அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெறும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

கும்பம்: நிதானித்து செயல்படுவதால் நற்பலன் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும், குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மீனம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு. ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/06/2019

மேஷம்: உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் மற்றும் உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க ...

%d bloggers like this: