Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/05/2019

இன்றைய நாள் எப்படி 05/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 22ம் தேதி, ஷாபான் 29ம் தேதி,
5.5.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, பிரதமை திதி நாளை அதிகாலை 4:53 வரை;
அதன்பின் துவிதியை திதி, பரணி நட்சத்திரம் மாலை 5:07 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : சூரியன் வழிபாடு.

 

மேஷம்: புதியவர் ஒருவர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் : சிலரது பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் நேரம் பணிபுரிவது அவசியம். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். சுற்றுப்புற சூழ்நிலையின் தொந்தரவினால் நித்திரை தாமதமாகலாம்.

மிதுனம்: மனதில் அன்பு அதிகரிக்கும். உயர்வு, தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி எளிதாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: மனதில் கருணை அதிகரிக்கும். நற்செயலால் சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பலன் அளிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்: எதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வீடு வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி: பேச்சில் நிதானம் பின்பற்றுவதால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது நல்லது. பணவரவு சராசரி அளவில் இருக்கும். பொருட்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.

துலாம்: கடந்த நாட்களில் அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: நடைமுறை வாழ்வில் இருந்த குறுக்கீடு விலகும். தொழில், வியாபார வளர்ச்சியில் சிறப்பான இடத்தை பிடிக்க கடுமையாக பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான தீர்வு வந்து சேரும்.

தனுசு : குடும்பத்தேவை அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

மகரம்: முக்கிய பணி நிறைவேற தாமதமாகலாம் .தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் படும்படி தாராளமாக செலவழிக்க வேண்டாம். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியம் பெற உதவும்.

கும்பம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை ஏற்படும். இயல்பாக வாழக்கை நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி அதிகரிக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள்.

மீனம்: சிலர் தவறான ஆலோசனை சொல்வர். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: