Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/04/2019

இன்றைய நாள் எப்படி 05/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 22ம் தேதி, ரஜப் 28ம் தேதி, 5.4.19, வெள்ளிக்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி மதியம் 2:55 வரை; அதன் பின் பிரதமை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 6:10 வரை; அதன் பின் ரேவதி நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி
* குளிகை : காலை 7:30 – 9:00 மணி
* சூலம் : மேற்கு

* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அஸ்தம்
* பொது : மகாலட்சுமி வழிபாடு

 

மேஷம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.பணவரவை விட செலவு கூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

ரிஷபம்: நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி தாமாக தேடி வரும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர். பணியாளர்களுக்கு பாராட்டு, பரிசு கிடைக்கும்.

மிதுனம்: மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திட்டமிட்ட பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் சார்ந்த நிலுவைப் பணி நிறைவேறும்.உபரி வருமானம் கிடைக்கும்.தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கடகம்: எதிர்பார்த்த நன்மை எளிதாக கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். பெண்கள் அதிகம் பயன் தராத பொருளை வாங்க வேண்டாம்.

சிம்மம்: பேச்சில் ஆரவாரம் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்ப்பு நிறைவேற புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். உறவினர் வகையில் செலவு ஏற்படலாம். பெண்களுக்கு குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும்.

கன்னி: கடந்த கால அனுபவத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்து கொள்வர். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.

துலாம் : எதிரியால் இருந்த தொல்லை மறையும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர்.

விருச்சிகம்: நண்பர் அதிக எதிர்பாப்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் செலவாகும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். மாணவர்கள் படிப்பில் முன்னேற விடாமுயற்சி வேண்டும்.

தனுசு : அடுத்தவரின் தவறுக்கு சிரமப்படலாம்.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்றுவது தாமதமாகும்.மிதமான பணவரவு உண்டு.உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் காட்டுவர்.

மகரம்: நேர்மை எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும்.தாராள அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பெண்களுக்கு புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கும்பம்: அவசரப்பணி சிரமத்திற்கு ஆளாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

மீனம்: உறவினரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் சுபச்செலவு செய்து மகிழ்வர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: