Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/02/2019

இன்றைய நாள் எப்படி 05/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 22ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 29ம் தேதி,
5.2.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி நாளை அதிகாலை 5:11 வரை;
அதன்பின் துவிதியை திதி அவிட்டம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : துர்கை வழிபாடு.

மேஷம் : இஷ்டதெய்வ அனுகூலத்தினால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு ஆசி பெறுவீர்கள்.

ரிஷபம் : முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். பணவரவு சராசரி அளவில் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும்.

மிதுனம் : பணி நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

கடகம் : எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

சிம்மம் : மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில்
சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கன்னி : இரக்க குணத்தை சிலர் ஏளனம் செய்வர். முக்கியமான பணி அதிக முயற்சியினால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். நீண்டதூர பயணங்களில் அதிக பாதுகாப்பு பின்பற்றுவது நல்லது.

துலாம் : உறவினரின் மாறுபட்ட செயல் வியப்பை தரலாம். தொழில் வியாபாரத்தில் நிதான அணுகுமுறை நல்லது. பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். அதிக பயன்தராத பொருட்களை வாங்க வேண்டாம்.

விருச்சிகம் : மனதில் இருந்த தயக்கம் விலகும். செயல்களில் கூடுதல் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

தனுசு : மனம் விரும்பாத நிகழ்ச்சியில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசியமான செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு வேண்டும்.

மகரம் : கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகின்ற இடையூறு இஷ்ட தெய்வ அருளால் விலகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கும்பம் : எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில், வியாபாரம் தாமதகதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மீனம் : பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவீர்கள். பொறுப்பான செயல் பாராட்டு பெறும். தொழிலில், உற்பத்தி விற்பனை செழித்து கூடுதல் பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: